Breaking
Sat. Dec 6th, 2025

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை (வடக்கு) 206 A எனும் கிராம சேவகர் பிரிவின் ஹுஸைன் வைத்தியர் வீதியில் உள்ள மேற்படி காணியானது பராமரிப்பு அற்ற நிலையில் காணப்படுகின்றமையால் இக்காணி முழுவதும் குப்பை கூளங்களாக காணப்படுவதுடன் தற்போதய நிலையில் மழை காரணமாக நீர் தேங்கி அதன் விளைவாக டெங்கு பரவும் அபாயமும் காணப்படுகிறது.

தற்சமயம் இவ்வீதியில் வசிக்கும் பாடசாலை செல்லும் மாணவன்  தொடர்த்தேர்ச்சையான காய்ச்சல் காரணமாக வாழைச்சேனை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு 8 நாட்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.

மேலும் அந்த வீதியில் உள்ள பல குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2014/12/15 அன்று குறிப்பிட்ட காணியின் அருகாமையில் உள்ள இன்னுமொரு சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இவ்விடயம் தொட‌ர்பாக உரிய பகுதிக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தெரியப்படுத்திய போது குறிப்பிட்ட அதிகாரி இரண்டு தடவைகள் குறிப்பிட்ட விடயம் தொட‌ர்பாக கவனம் செலுத்தி காணிக்கு பொறுப்பானவரிடம் தெரியப்படுத்திய போதும் இதுவரை எது விதமான நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே மேற்படி விடயத்தை உடனடியாக கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியை மிக வினயமாக கேட்டுக் கொள்கிறோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

பிறைந்துரைச்சேனை ஹுஸைன் வைத்தியர் வீதியில் வசிக்கும் மக்கள்.

Related Post