காத்தான்குடியில் அடை மழை; வீடுகள், வீதிகள் வெள்ளத்தில்; இயல்பு நிலை பாதிப்பு

நேற்று இரவு முதல் கிழக்கு மாகானத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இவ் அடை மழை காரணமாக காத்தான்குடியில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.