Breaking
Fri. Dec 5th, 2025

களுத்துறை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (14) காலை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

அஹதியா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் உவைஸ் முஹம்மட், ஹைதராபாத் KIMS வைத்தியசாலையின் பொதுமுகாமையாளர் சுனில் தெஹ்ரி, களுத்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஆமிர் நாசிர், களுத்துறை உதவி பொலிஸ் அத்தியகட்சர் இனோகா லியானகே, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நப்றாஸ் நில்பர், களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளனத் தலைவர் உவைன், செயலாளர் ஹிசாம் சுஹைல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post