இராணுவத்தினருக்கான பொது மன்னிப்புக் காலம் 25ஆம் திகதி வரை நீடிப்பு

இராணுவத்தில் இருந்து தப்பியோடிய இராணுவத்தினரை சட்ட ரீதியாக விலக அவகாசம் வழங்கும் பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இக்25ம் திகதி வரை இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டரீதியாக விலகும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமது படையணிக்கு அறிவிக்காமல் விடுமுறையில் இருப்பவர்கள் உடனடியாக ஆஜர் ஆகவும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2ம் திகதி முதல் ஆரம்பமான இந்த பொது மன்னிப்புக்காலம் நாளையுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.