Breaking
Fri. Dec 5th, 2025

பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், ரஜரட்டை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், மொரட்டுவை, சப்ரகமுவ,ஊவா,வெல்லஸ்ஸ, தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள், கலைப் பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம்
என்பவற்றிற்கு புதிய நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வடமேல் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Post