Breaking
Fri. Dec 5th, 2025

கொழும்பில் அமைந்துள்ள லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த கொழும்பு பிரதான நீதவான் தடை விதித்துள்ளார்.

பொலிஸ் தரப்பு முன்வைத்த அறிக்கை ஒன்றை அடுத்து நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிராக இன்று (23) காலை 08.30 – 09.30 மணிவரை ஆணைக்குழு முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பிவிதுரு ஹெல உருமய தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Post