Breaking
Fri. Dec 5th, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த துமிந்த சில்வா எம்.பி, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘எனக்கு எதிராக சேறு பூசுவதால் நான் அஞ்சப்போவதில்லை. நான் குற்றமற்றவன் என்று சொல்லிவிட்டேன். அதை மாத்திரமே என்னால் சொல்ல முடியும். தவிர, கொலன்னாவை வேலைகளை நான் தற்போது செய்து வருகிறேன். எனக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சேறு பூசும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நான் பின்வாங்கப்போவதில்லை. என்னுடைய மக்கள் என்னுடன் எப்போதும் இருப்பார்கள்’ என்று கூறினார்.

Related Post