Breaking
Fri. Dec 5th, 2025

முகம்மட் பஹாத்

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்படவுள்ளது.

வெகுவிரைவில் சர்வதேச தரத்திலான சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகம்
செய்யப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத்
சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வியன்னா சர்வதேச பிரகடனத்திற்கு அமைவான போக்குவரத்து விதிகள்
வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன.

இதன் பின்னர் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமும் சர்வதேச தரத்திற்கு உயர்வடைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை
இணையத்தின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட
உள்ளன எனவும் தெரிவித்தார்.

Related Post