Breaking
Fri. Dec 5th, 2025

எனது பரம்பரையிலுள்ளவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம் பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பரம்பரை பரம்பரையாக எனது குடும்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தனக்கு எப்போதும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் கிடையாது எனவும் மக்களின் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதனைத் தவிர தனிப்பட்ட நோக்கங்கள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்டமைக்கு எனது பரம்பரை சுதந்திர கட்சியை சேர்ந்ததல்ல எனவும் எனது தந்தை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post