(தொடரும் வில்பத்து சர்ச்சை )….மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்ற நீதி மன்றம் செல்வோம் …! சிங்களே ஜாதிக பெரமுன

வில்பத்து வன பிரதேசத்தில் முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியமர்த்தியுள்ளதாக  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மீது சிங்களே ஜாதிக பெரமுன  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவில் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை செய்திருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த அமைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு திணைக்களத்தில் சாட்சி வாக்கு மூலங்களை பதிவு   செய்துள்ளது.

அதன் பின்னர் இவ்விடயம் தொடரப்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிங்களே ஜாதிக பெரமுன அமைப்பின் தலைவர்  மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் உயரதிகாரிகளை பலி கொடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுத்தின் தப்பித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுமத்தியுள்ளார்.

மேலும் அங்கு  சட்டவிரோதமாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற நீதி மன்றம் செல்லவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.