Breaking
Fri. Dec 5th, 2025

அஸ்ரப் ஏ சமத்

சிறுபான்மையினரை பாதுகாப்பதே ஐக்கிய தேசிய கட்சியினரின் கொள்கை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் கண்டி யை ஆட்சி செய்த சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்து வந்தனர்.
ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்களை அவர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ய முயற்சித்தனர் அப்போது ஸ்ரீ ராஜ சிங்க மன்னர் முஸ்லிம்களை அவர்களை கிழக்கிலும் அக்குரனையிலும் குடியேற்றினார்.
இன்று சில கடும்போக்கு அமைப்புகளுக்கு வரலாறு மறந்துவிட்டது இந்த நாட்டு சிறுபான்மை மக்களை அடக்கி ஆள்வதற்கு  நினைக்கிறார்கள் அவர்கள் எமது வரலாற்றை சற்று படித்துவிட்டு வரவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மலரவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பலம் மிக்க அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாகப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Post