20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் ?

எம்.ஐ.அப்துல் நஸார்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு வருவதாக சட்ட வரைஞர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜீ.எஸ்.அருண ஷhந்த டி சில்வா தெரிவித்தார்.

முதற் பிரதி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் அது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவினை சத்தமேதுமின்றி   செய்து முடித்த பெருமையும் சட்ட வரைஞர் திணைக்களத்தையே சாரும்.

அரச கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் கொள்கைககளை சட்ட வரைவுகளாக மாற்றுவது எமது திணைக்களமாகுமட எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜீ.எஸ்.அருண ஷhந்த டி சில்வா தெரிவித்தார்.

அவைகளும் முதலில் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டு பின்னர் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்படுகின்றன.