அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணி பொத்துவில் பிரதேசத்தில் (படங்கள் இணைப்பு)

கலைமகன் 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்சி விஸ்தரிப்பு பணியொன்று அண்மையில் பொத்துவில் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளரும் சிம்ஸ் தனியார் பல்கலைகழக பணிப்பாளர் நாயகமுமான கணணி பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த அதிகளவிலாலான  இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும்  மிக முக்கிய         பிரச்சினைகள்  பல  ஆராயப்பட்டதுடன் அகில இலங்கை மக்கள்               காங்கிரஸ்  கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் கட்சியின் கொள்கைகள் பற்றியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அன்வர் எம் முஸ்தபா தெளிவாக உரையாற்றினார்.இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

aa.jpg2_.jpg3_ aa2 (1) aa1.jpg2_1