புத்தளம் காசிமிய்யாவில், சிங்கள மொழி கற்பிக்கும் பௌத்த தேரர்

முஹ்ஸி

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் இன்று (25.5.2015) இடம் பெற்ற காலைக் கூட்டத்தில் புத்தளம் கிழக்கு கிராம சேவகர்ப் பகுதியில் அமைந்துள்ள செம்மாந்தளுவ பௌத்த விகாரையின் தலைமை மதப் போதகர் “மஹனுவர திலகரத்ன தேரர்” கலந்து கொண்டு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் தான் அறிந்து வைத்துள்ள விடயங்கள் சிலவற்றை எளிமயான முறையில் தமிழிலும்,சிங்களத்திலும் பகிர்ந்து கொண்டார்.
இவர் புத்தளம் அல்மத்ரசத்துள் காசிமிய்யாவில் பகுதி நேரமாக மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பித்து வருகின்றார். பிரதேசத்தில் வாழும் மூவின மக்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லுறவு, சகவாழ்வு தொடர்பில் அதிக கரிசனையும், பொதுப் பணிகளில் தீவிர ஈடுபாடும் கொண்டு செயற்படுகிறார். இவர் ஓய்வு பெற்ற அதிபரும் ஆவார்.
அன்னாருக்கு கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் அச்சடித்து வெளியிட்டுள்ள அல் குர்ஆனில் உள்ள பிரார்த்தனைகள் அடங்கிய மும்மொழிகளில் ஆன ஸ்டிக்கர்ஸ்கள் வழங்கப்பட்டன.