Breaking
Fri. Dec 5th, 2025

நான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூருக்கு செல்ல மாட்டேன் என்பதை உறுதிப்பட தெரிவித்து கொள்கின்றேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தன்னை சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பிதல் வந்தமை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து பலர் கவலை தெரிவித்து எனக்கு செய்திகளை அனுப்பி இருந்தார்கள்.

நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை நான் மதிக்கின்றேன். இந்நாட்டுக்கு எனது சேவை தேவை என்பதை உங்கள் கேள்விகள் மூலம் அறிந்து கொண்டேன். எனவே தாய் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்பதை உறுதிப்பட தெரிவித்து கொள்கின்றேன்.

Related Post