Breaking
Fri. Dec 5th, 2025

ஊடகவியலாளர்களின் நலன்கருதி மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான விபரங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஊடகவியலாளர்களின் நலன் கருதி மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.தகவல்களை முழுமையாக அறிந்துகொண்ட பின்னர் விண்ணப்பங்களை ஊடக அமைச்சில் பெற்றுக்கொள்ளலாம்.
அதற்கமைய இலங்கை பிரஜையாக இருத்தல்,  5 வருட அனுபவம், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வைத்திருத்தல் என்பனவே விண்ணப்பிப்பதற்கான தகமைகளாக கொள்ளப்படுகின்றன.
மேலும் சுதந்திர ஊடகவியலாளர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post