Breaking
Fri. Dec 5th, 2025
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம் அனைவரையும் கபூல் செய்து கொள்வானாக
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழு சமய, சமூகப் பணிகளில் தங்களை அர்ப்பணித்து 63 வயதைத் தாண்டியுள்ள ஆலிம்களை கௌரவிக்கத் தீர்மானித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் விபரங்களைத் திரட்டி வருகின்றது. இது தொடர்பில் ஜம்இய்யா தனது மாவட்ட, பிரதேசக் கிளைகளுக்கு அறிவித்துள்ளது.
பல்வேறு இடங்களிலிருந்து மேற்படி உலமாக்களின் விபரங்கள் வந்துள்ள போதிலும் இன்னும் பலருடைய விபரங்கள் வர இருப்பதாக ஜம்இய்யா கருதுகின்றது.
எனவே மாவட்ட, பிரதேசக் கிளைகள் இவ்விடயத்தில் துரிதமாகச் செயற்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் விபரங்களை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்குமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.

இதுவரை தங்களது விபரங்களைக் கொடுக்காத 63 வயதைத் தாண்டிய ஆலிம்கள் தமது பிரதேசக் கிளைகளை தொடர்பு கொள்ளுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு 011-7-490490 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Related Post