Breaking
Fri. Dec 5th, 2025
இஸ்ஸதீன் றிழ்வான்
சென்ற அரசு நிஜ துப்பாக்கிகளை போலிகள் என்று ஊடகங்களுக்கும் நீதிக்கும் முன்னிலையில் சொல்லி மக்களை ஏமாற்றியது போன்று இந்த அரசு மரிச்சிக்கட்டியை வில்பத்து என்று சொல்லி எங்களை ஏமாற்றமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இருந்த போதும் ஊடகங்கள் தொடர்ந்தும் வில்பத்துவை பாதுகாப்போம் என்ற பொயரில் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் பாரிய போலிப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
நாடளாவிய ரீதியில் சாத்வீகமான வழிகளை மட்டும் பயன்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுப்போம் என்பது முஸ்லிம்களின் நடத்தைகளில் உள்ள ஒன்று என்றபடியால் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வடக்கு முஸ்லிம்களின் பூர்வீகம் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில்
அல்ஜாஸீம் ஆராய்ச்சி நிறுவனம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம், உடனடித் தீர்வுக்கான குழு,  மற்றும் வடமாகாண உலமா சபை ஆகிய 05 அமைப்புக்கள் சேர்ந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துவருகின்றன.
நாடுபூராகவும் உள்ள ஜூம்ஆ பள்ளவாசல்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கையெழுத்து திரட்டளுக்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை வழங்கும்படி மரிச்சிக்கட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வளர், எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் வேண்டிக்கொள்கிறார்.

Related Post