காயிதே மில்லதின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் வெளியீடு

அஸ்ரப் ஏ சமத்

இந்திய அறிஞா் அரசியல் வாதியுமான காயிதே மில்லதின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்  கொண்ட  இருவெட்டு  வெளியீட்டு நிகழ்வுநேற்று  மருதானை அல் சாபா மண்டபத்தில் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிரேஸ்ட அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அஸ்லம்  ஆகியோறும் கலந்து கொண்டனா்.

இந் நிகழ்வுக்கு  இருவெட்டு தயாரிப்பாளரும் இலக்கியவாதியும் எழுத்தாளருமான தமிழ் நாடு  ஆளுா் சா நவாஸ் கலந்து கொண்டாா். சீ.டியின் முதல் பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.  சாம் நவாஸின் நன்பா்களான  சிரேஸ்ட ஊடகவியலாளா் எம்.நிலாம்,  டொக்டா் தாசீம் அகமத்,  சனுஸ் ஆகியோறும் உரை நிகழ்த்தினாா்கள்.