Breaking
Fri. Dec 5th, 2025
தன்னை பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. அரசியலில் இருந்து விரைவில் ஓய்வுபெறவுள்ளதாக  நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சமல் ராஜபக்ச நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன.
பிரதமராக நான் நியமிக்கப்படவுள்ளதாகவோ, பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவோ வெளியாகும் செய்திகளில் எதுவித உண்மையுமில்லை. எனக்கு அத்தகைய அபிலாசைகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1989ம் ஆண்டு முதல் முறையாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட சமல் ராஜபக்ச கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறார்.

Related Post