Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் அறிவிப்பார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி ஒரு சில தினங்களில் அறிவிப்பார்.
மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு 90 வீதமானவர்கள் ஆம் என்றே கூறியிருக்கின்றார்கள்.
எனவே மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஜனாதிபதி விரைவில் அறிவிக்க உள்ளார்.
போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related Post