600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள்

அஸ்ரப் ஏ சமத்

லைலா டீன் உம்மா பௌன்டேசனினால்  நோன்பு காலத்தில் தெமட்டக்கொட பிரதேசத்தில் வாழும் 600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் பொதிகளை வழங்கும் நிகழ்வு தெமட்டக்கொட அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.  காலாநிதி  ஹாரீஸ்டீன் ஏற்பாட்டில் இப் பொதிகள் வழங்கப்பட்டன.

தெமட்டக்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டாா்.  இம்முறை ஏறாவுர் போன்ற பல்வேறு இடங்களி்வல் 2000 பொதிகள் நோன்பு நோற்பதக்காக ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது.