நாளை றமழான் நோன்பு  இலங்கையில் ஆரம்பம்

நேற்று, ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத் திலும் தென்படாததால் இன்று ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை (19) ரமழான் முதல் நோன்பை ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட   உலமாக்கள் – கதீப்மார்கள், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக  மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.