அப்துல் கலாம் இன்று பிரதமர் ரணிலுடன் மதிய போஷனம்

இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கு இன்று மதிய போஷன விருந்தளிக்கிறார்.

அப்துல் கலாம், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அழைப்பையேற்று மூன்றுநாள் விஜயமாக நேற்றிரவு இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.