Breaking
Fri. Dec 5th, 2025
தர்கா நகரில் 30.06.2015 சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்துசென்று பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தர்கா நகர் பிரதேசத்தில் கடந்தவருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு அருகில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றபோது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலி பொட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளனர்.
இதனை நிறுத்துமாறு முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்தும் நிறுத்தாமையினால் முஸ்லிம் இளைஞர்களினால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் 4 சிங்கள இளைஞர்களும் 2 முஸ்லிம் இளைஞர்களும் இடையில் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினர் குறித்த பிரதேசத்திற்கு வருகை வந்து நிலைமைகளினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் பொலிஸாரினால் தேடப்படுகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

Related Post