அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேசத்திற்கான முதலாவது கிளை கட்டாரில்

இலங்கை அரசியலில் புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கும் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக கடல் கடந்து வாழும் இலங்கை மக்களினை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரும் பணியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது.குறி்ப்பாக இலங்கை அரசியலில் நீண்ட காலமாக இருந்து வருகின்ற அரசியல் ஒவ்வாமை மற்றும் தனிப்பட்ட செயற்பாடுகள் என்பன இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கட்சி ரீதியான பிளவுகளுக்கு வழி ஏற்படுத்தியதுடன்,பேரம் பேசும் சக்தியின் பலத்தினை பலவீனப்படுத்தியுள்ளதை அரசியல் நீரோட்டத்தில் காணமுடிகின்றது.இந்த நிலையானது இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல்  சூன்யமயமாக்களுக்கு அடித்தளத்தினை ஏற்படுத்தியுள்ளதையும் அவ்வப்பொது வரலாற்றிலிருந்து காணமுடிகின்றது.

காலத்தின் தேவை மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு என்பனவற்றை கவனத்திற்கு கொண்டு கட்சி அரசியல் ஒன்றின் தேவைப்பற்றி உணரப்பட்ட வேளை ஆரம்பிக்கப்பட்டது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.இன்றைய அரசியல் போக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள கட்சிகள் மற்றும் இனவாத சித்தமாந்தங்களுக்கு முன்னுரியைமளித்து பிரிவினைக்கு வித்திடும் கட்சிகள் மற்றும் சக்திகள் என்பனவற்றுக்கு சவாலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயற்படுகின்றது.

பிரதேச  சபை முதல் பாராளுமன்றம் வரையிலான அரசியல் உட்கட்டமைப்பு வலையமைப்பில் சரியான பதவிகளை ஏற்படுத்தி அதில் இனம்,மதம்,பேதம்,பிரதேசம் என்பன அற்ற வகையில் பிரதி நிதித்துவத்தை வகிக்க செய்துள்ளது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பதை யாவரும் அறிவர்.

இலங்கைக்குள் ஏற்படும் விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்பில் ஆழமாக அவதானிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,அதற்கு முகம் கொடுக்கும் வியூகத்தை சரியாக செய்துவருகின்றது.எழுந்தமான பேச்சுக்கள்,மற்றும் ஆவேஷமான தீர்மானங்கள் ஒரு போதும் நீண்ட பயணத்திற்கு துயைாக இருக்காது என்பதை உணர்ந்ததால் இந்தக்கட்சி பல சவால்களை எமது சமூக மட்டத்திலும்,குறிப்பாக பெரும்பான்மை அமைப்புக்களாலும் விமர்சிக்கப்பட்டுவருவதையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

இந்த நிலையில் கட்சியின் செயற்பாடுகள் சர்வதேச மயப்படுத்ப்படல் வேண்டும் என்ற விடயத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் கொண்டுள்ள ஆர்வம்,இந்த கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் செயற்படுவதை உறுதி செய்ய முடிகின்றது.அந்த வகையில் அகில இல     ங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது விருட்சங்களை தற்போது சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்ல ஆரம்பித்துள்ளது.

கடல் கடந்து பணியாற்றும் இலங்கையர்கள் இவ்வாறான அமைப்பின் அவசயித்தை உணர்ந்திருக்கின்றனர்.என்பதை முகப்பு நுால்களில் (பேஸ் புக்) ஊடாக அறியமுடிந்தது.இந்த சந்தரப்பம் மக்களது சந்தரப்பம் என்பதை உணர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்  கிளைகைளை சர்வதேசத்தில் ஏற்படுத்துவது தொடர்பில் உடன்பாடுகளை எட்டினார்.

கட்டார் நாட்டுக்கு வருகைத்திருந்த கட்சியின் தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீனை தொழில் நிமிர்த்தம் தங்கியிருக்கும் இலங்கை சகோதரர்கள் சந்தித்து கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதன் அவசியத்தை விளக்கியதுடன்,முதலாவது கிளையினை கட்டாரில் ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தையும் வழஙை்கினர்.

இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேசத்திற்கான முதலாவது கட்டார் கிளைக்கான ஒப்புதலை அமைச்சர் வழங்கினார்.இதன் செயற்பாடுகள்,விரிவுபடுத்தல் என்பன முன்னெடுக்கப்படுவதற்கான கருத்தாடல்களும் இந்த சந்திப்புக்களின் போது பகிரப்பட்டது.