Breaking
Fri. Dec 5th, 2025

இந்த நாட்டில் வாழும் ஆதிவாசிகள் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்துவருவதாக ரத்துகுல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னில எத்தோ தெரிவித்துள்ளார்.

தமது இனத்திற்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் கூட கிரமமான முறையில்வழங்கப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாரம்பரிய தொழில்களை செய்து ஜீவனோபாயத்தை கொண்டு நடத்திய தமக்கு ஏனைய தொழில்களை செய்து வாழ்க்கையை கொண்டு செல்வது கடினமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய எந்தவொரு அதிகாரிகளும் தம்மிடம் வருவதில்லை என்றும் சுதா வன்னில எத்தோ குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post