ஆபிரிக்க நாட்டு மக்களின் பாவனைக்கு ஜனாதிபதியினால் ஒரு மில்லியன் கையுறைகள் அனுப்பிவைப்பு

ஆபிரிக்காவில் எபோலாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கான இலங்கையின் பங்களிப்பாக, ஒரு மில்லியன் சத்திரசிகிச்சைக் கையுறைகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் (செப். 18) அலரி மாளிகையில் வைத்துக் கையளித்தார்.