Breaking
Sat. Dec 13th, 2025
உலக காசநோய் தினம் இன்று ஆகும்.
இம்முறை உலக காசநோய் தினத்தின் தொனிப்பொருள் அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அடையாளங்காண்போம்- சிகிச்சையளிப்போம்- அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம் என்பதாகும்.
1884ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி டொக்டர் ரொபட் கொவ் காசநோயை ஏற்படுத்தும் பக்டீரியா  Mycobacterium tuberculosis என அடையாளங்கண்மையை கௌரவப்படுத்தும் வகையில் இத்தினம் உலக காசநோய் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் காசநோய் பக்டீரியா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். உலக சனத்தொகையில் 9 மில்லியன்  பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர். அவர்களில் 1.5பேர் உயிரிந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு 9500 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். எனினும் உலக சுகாதார தாபனத்தின் தகவலுக்கமைய இலங்கையில் 14000 காசநோயாளர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது என காசநோய் தடுப்பு தொடர்பான தேசிய திட்டம் தெரிவிக்கிறது.
காசநோயானது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடிய தொற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post