எனது பதவியை பறித்துக்கொண்டார்: ராஜபக்ஸ

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை தன்னிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்துக்கொண்டதாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

நீர்கொழும்பு ,கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் ஒருபோதும் சுதந்திர கட்சியின் தலைமை பதவியை தானம் செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனது தலைவர் பதவியை பறித்துக் கொண்டார் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.