Breaking
Fri. Dec 5th, 2025

ஏறாவூர் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 6 பேரையும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணின், கணவரது சகோதரரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதுதவிர தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப்பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்காக பொலிஸாரால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சான்றுப்பொருட்களை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

ஏறாவூர், முகாந்திரம் வீதி பகுதியைச் சேர்ந்த 56 வயதான தாய் மற்றும் 32 வயதான மகள் ஆகியோர் கடந்த 11 ஆம் திகதி அவர்களின் வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஆத்திரமுற்ற பிரதேச மக்கள் இந்த இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்து துரித சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.(nf)

By

Related Post