குருநாகல் – கொகரல்ல வாகன விபத்தில் சலீம், ரசீமா வபாத்

குருநாகல் கொகரல்ல பிரதேசத்தில் 11.10.2014 இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் குருநாகலையைச் சேர்ந்த கமால்தீன் மொஹமட் சலீம் (62), பாத்திமா ரசீமா (52) ஆகியோரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
இச்சம்பவம்11.10.2014 காலை 11.35 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பின்நோக்கிச் செலுத்தப்பட்ட டிப்பர் வண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித் துள்ளனர்.