Breaking
Fri. Dec 5th, 2025

கலட்டுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கொழும்பில் சில பகுதிகளில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஹங்வெல்ல, மீபே, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, கலு அக்கல, ருக்மல்கம, பெலவத்த, கொடகம, பன்னிப்பிட்டிய, மத்தேகொட ஆகிய பகுதிகளிலேயே நாளை (20) பிற்பகல் 01 மணி முதல் மறுநாள் 21 ஆம் திகதி வரையிலான 16 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கொழும்பு 08 , 09, 10 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனவே நீர் வெட்டின் பின்னர் சிரமங்களுக்கு உள்ளாகாமல் தற்போதே நீரை சேமித்து வைக்கும் படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

By

Related Post