Breaking
Sun. Dec 7th, 2025
தனது சகோதரியின் இரு கால்களையும் வாளால் வெட்டி  ஒரு காலை எடுத்துச் சென்ற  கோர சம்பவமொன்று பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான பெண் பல்வேறு வெட்டுக்காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நீண்ட கால குடும்பத்தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
காலை வெட்டிய  சகோதரனும்  அவரது மகனும் தலைமறைவாகியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Post