சிங்கபூரிற்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது

இலங்கையிலிருந்து சிங்கபூரிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன்,அதன் பெறுமதி 53 இலட்சத்து 38 ஆயிரத்து 136 ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.