Breaking
Fri. Dec 5th, 2025

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த இளம் தாயொருவர் சாப்பிடும்போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை திருகோணமலை பிரதான வீதியின் மஹகனந்தராவ குளத்தினருகே இருந்த கடையொன்றில் காலை உணவாக பாணும் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியதால் அவதியுற்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட இவரது கணவர் உடன் பாதிக்கப்பட்ட தனது மனைவியை மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போதும் பாதிக்கப்பட்ட இளம் தாயை பரிசோதித்த வைத்தியர்கள். அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பாண் துண்டு தொண்டைக்குள் சிக்கி மரணமடைந்தவர் புத்தளம் முன்னே குளம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான ஏ. தம்மிக்கா குலரத்ன என்ற 41 வயதுடைய பெண்ணொருவராவார்

பிரேத பரிசோதனைகளின் பின் மரணமடைந்த பெண்ணின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிஹிந்தலைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

By

Related Post