புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சராகவே பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இந்த கொள்கைக்கமைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்டு நிலையான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை முழுமைபடுத்தும் தொழில்நுட்ப பாதைக்கு ஒரு ஆய்வாக இதனை கருத்திற்கொள்ள முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

