Breaking
Mon. Dec 15th, 2025

மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 34 பேர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் கட்டளையையும் மீறி இவர்கள் பேரணியில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி சார்பில் அங்கம் வகிக்கும், 51 உறுப்பினர்களில், 45 பேர் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

இவர்களில் 34 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஏனையவர்கள் கூட்டணிக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாவர்.

நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, விதுர விக்கிரமநாயக்க, பிரசன்ன ரணவீர, ரொசான் ரணசிங்க ஆகியோர் வெளிநாடு சென்றிருப்பதாலும், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதேவேளை, நேற்றைய கூட்டத்தில் சோமவன்ச அமரசிங்க தவிர்ந்த புதியவர்கள் யாரும் மகிந்த அணியுடன் இணைந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post