Breaking
Fri. Dec 5th, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்லவர் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று (13) பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யார் அழுதாலும் யார் தேங்காய் உடைத்தாலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே ஆட்சி செய்வார்.

இந்த அரசாங்கம் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நல்லவர்.

எனினு,ம் அவரை சுதந்திரமாக நிம்மதியாக இருக்க சிலர் இடமளிப்பதில்லை என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து மேடைகளில் பேசியவர்களில் ஹிருணிகாவும் முக்கியாமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post