முன்னாள் அமைச்சர் நவவி றிஷாத் பதியுதீனுடன் இணைவு; புத்தளத்திலும் போட்டி

– ஜமால் –

முன்னாள் வட மேல் மாகாண சபையின் அமைச்சர் நவவி இன்று  (10)அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இன்று காலை சிறிகொத்தாவுக்கு வருகை தந்த நவவி புத்தளம் மாவட்டத்தில் ஐதேக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்.

அரசியலிலிருந்து சிலகாலம் ஒதுங்கியிருந்த இவர் புத்தளம் மாவட்ட மக்களின் நல்லபிப்பிராயத்தை பெற்றவராகவும் அரசியலில் சேவை புரிந்த ஒருவருமாவார்.

புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் ஏகோபித்த விருப்பத்தின் அடிப்படையில் தற்போது றிஷாத்பதியுதீனுடன் இணைந்துள்ளார்.