மெகசீன் சிறைச்சாலையில் மஹிந்த!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச இன்று காலை மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

போலி அட்டர்னி பத்திரம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமாக 11 கோடி ரூபா பெறுமதியான பங்குகளை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் மொஹமட் முஸம்மில் கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.