Breaking
Fri. Dec 5th, 2025

– ஜனாதிபதி ஊடகப்பிரிவு –

மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் இன்று (8) காலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் தமக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

அதன்பிரகாரம் இசுரு தேவப்பிரிய அவர்கள் மேல் மாகாணசபை முதலமைச்சாராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அதேபோல் தர்மசிறி தஸநாயக்க அவர்கள் வடமேல் மாகாணசபை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் வடமேல் மாகாண ஆளுனர் அமரா பியசீலி ரத்நாயக்க அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியினுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Related Post