Breaking
Fri. Dec 5th, 2025

அம்பாறை, அட்டளைச்சேனை கோணாவத்தை கடற்கரை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்;டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரினால் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அட்டாளைச்சேனை எட்டாம் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகாமையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் முன் டயரில் ஏற்பட்ட சேதம் காரணமாக இரவு 8.15 மணியளவில் சைக்கிளின் முன் டயரினைக் கழற்றி திருத்துவதற்காக உரிமையாளர் கொண்டு சென்ற போது பாதையோரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

பாரிய தீயுடன் மோட்டார் சைக்கிள்  எரிவதைக் கண்ட பொது மக்கள் தீயினை தடுக்க முற்பட்ட போதிலும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post