Breaking
Sun. Dec 7th, 2025

இலங்கையில் இறுதிக் கட்டத்தில்  இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சனல் 4 இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை  நேர்மையானது , எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதிநடவடிக்கைகளுக்குவழிவகுக்க கூடும், எமது வீடீயயோக்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை என எம்மை விமர்சனம் செய்யும் இலங்கை அரசாங்கமும், அதன் இராணுவமும் குற்றம்சாட்டியது,

ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நீருபிப்பதற்க்கு எமக்கு புதிய ஆதராங்கள் கிடைத்தன

ஓவ்வொரு நாளும் இலங்கை மீதான அழுத்தங்கள் இந்த விடயத்தில் அதிகரித்து வருகின்றன, இலங்கையிடம் கேட்கப்படும் கேள்விகள் கடினமானவையாக, விடையளிக்கமுடியாதவையாக மாறி வருகின்றன. சர்வதேவிருதிற்கான நியமனம் இந்த அழுத்தத்தை அதிகரிக்கும் என கருதுகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்க்கு பின்னர் வடக்குகிழக்கில் உட்கட்டுமான வசதிகளில் பாரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது.எனினும் இதன் பின்னாலுள்ள நோக்கங்கள் குறித்து கடும் கேள்விகளை கேட்கவேண்டும்.

புதிய வீதிகளும், புகையிரத பாதைகளும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் தமிழ்மக்களை பொருளாதார ரீதீயாக பலவீனப்படுத்தும் நடவடிக்கைக்கே உதவப்போகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post