Breaking
Fri. Dec 5th, 2025
– பா.சிகான் –
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கடிதத்துடன்  மாணவன்  இன்று தற்கொலை செய்தமை குறித்து மக்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
 
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்ற ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
 
கோண்டாவில்  பகுதி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று (26) காலை  ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
எனினும் இம்மாணவன் தனியாக வந்தாரா அல்லது வேறு யாராவது கூட்டி வந்து தள்ளி விட்டனரா என்கின்ற விசாரணை தற்போது பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
இவரது சடலத்திற்கு அருகில் காணப்பட்ட கொப்பி ஒன்றில் காணப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக சந்தேகம் நிலவுகின்றது.
 
இக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் குறித்த மாணவரது கையெழுத்து அல்ல எனவும்,இவரை யாராவது தூண்டிவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
 
சடலம் நீதவான் விசாரணக்காக குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post