ஜனாதிபதியை சந்தித்தார் புதிய கடற்படை தளபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிய கடற்படை தளபதி ரவீந்திர குணரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் 20 ஆவது கடற்படை தளபதியாக பதவியேற்ற ரவீந்திர விஜயகுணரத்னவுக்கு ஜனாதிபதியினால் நினைவுப் பரிசொன்றும் இச்சந்திப்பின்போது வழங்கிவைக்கப்பட்டது.