Breaking
Fri. Dec 5th, 2025
பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய  சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது.

இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை முற்றுகையிடுமாறு முதலமைச்சர் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறித்த இடத்தை முற்றுகையிட்ட மேல் மாகாண கல்வித்  திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரான பாடசாலை அதிபரையும் பெண்ணையும் தமது பொறுப்பில் எடுத்து, அவர்களை ஹொரணை வலய கல்வி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது. அத்துடன் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post