Breaking
Fri. Dec 5th, 2025

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றார்.

நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச் சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By

Related Post