மர்மபொருள் இன்று மாலை 6.30 க்கு விழும்

விண்வெளியில் இருந்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் இன்று மாலை 6.30 மணியளவில் தென் கடற்பரப்பில் விழும் என ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான டப்­ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பின் கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­தில்  விழும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த நேரத்தில் எவ்வித பொருட்களும் விழவில்லை.

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த மர்மபொருள் விழும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த மர்மபொருள் விழும் வளியில் எரிந்து விட கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.