இலங்கை விவகாரத்தில் ஒபாமா அக்கறை

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இலங்கை விவ­கா­ரத்தில் அதீத அக்­கறை செலுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ள ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­த­ர­ வ­தி­வி­டப்­ பி­ர­தி­நிதி சமந்தா பவர், இலங்­கையில் தற்­போ­து­வ­ரையில் நல்­லி­ணக்கம் முழு­மை­யாக கட்­டி­யெ­ழுப்­­ப­ப்பட­வில்­லை­யெ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஐக்­கிய நாடு­க­ளுக்­கான நிரந்­த­ர வதி­வி­டப்­பி­ர­திநிதி சமந்தா பவர் மூன்று நாள் உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ள நிலையில் அவ­ரது விஜ­யத்தின் இறுதி தின­மான நேற்று இலங்­கையின் எதிர்­கா­லத்தின் தூண்­க­ளாக காணப்­படும் இளைஞ சமு­தா­யத்­தி­ன­ருடன் கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார்.

கொழும்பில் ஒரு­மணி நேர­மாக இடம்­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் துறைசார் கற்­கை­நெ­றி­களை தொடரும் மாக­ண­வர்கள், சிவில் அமைப்­புக்கள், மனித உரிமை அமைப்­புக்கள் ஆகி­ய­வற்றில் அங்கம் வகிக்கும் இளைஞர் யுவ­திகள் உட்­பட பலர் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போதே ஐ.நா.வுக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­த­ர­வ­தி­வி­டப்­பி­ர­தி­நிதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நான் தற்­போது இரண்­டா­வது தட­வை­யாக இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருக்­கின்றேன். 2010ஆம் ஆண்டு வருகை தந்­தி­ருந்தேன். தற்­போது வடக்­கிற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தேன். அர­சியல் தலை­வர்கள், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் உள்­ளிட்ட பல­ரையும் சந்­தி­ருந்தேன். எல்லே விளை­யாட்டு வீராங்­க­னை­யாக வர­வேண்­டு­மென்­பது எனது கனவு. யாழில் பாட­சாலை மாண­வர்­க­ளுடன் எல்லே விளை­யாட்டில் பங்­கேற்­றது மகிழ்ச்­சி­யா­க­வுள்­ளது.

ஜன­வரி எட்டாம் திகதி புதிய ஆட்சி ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­யகம், பொறுப்­புக்­கூ­றுதல் ஆகி­ய­வற்றில் புதிய அர­சாங்கம் அக்­கறை கொண்­டுள்­ள­தோடு நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தற்­காவும் கூறி­யுள்­ளது. தற்­போது வரையில் இந்த நாட்டில் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் முழு­மை­ய­டை­ய­வில்லை. ஆனால் அதற்­கான செயற்­பா­டுகள் தற்­போது முன்­னெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த நாட்டின் எதிர்­கா­லத்­தினை தீர்­மா­னிப்­பதில் உங்­க­ளு­டைய (இளை­ஞர்கள்) பங்­க­ளிப்பு மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். கடந்த கால நிலை­மை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு , அடைப்­படை உரி­மை­க­ளுடன் சுதந்­தி­ர­மாக நிரந்­த­ர­மான சமா­தனம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்.

அதன் மூலம் நாட்­டி­னதும் இந்த நாட்டின் அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் எதிர்­காலம் சிறப்­பா­ன­தாக அமையும். அதற்­காக இளைஞர், யுவ­தி­க­ளா­கிய நீங்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து சிறந்த அடித்­த­ளத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

தற்­போது இலங்­கைக்கு சிறந்த அர­சியல் தலை­வர்கள் கிடைத்­துள்­ளார்கள். இந்த நாட்டில் பல்­வேறு பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்தி அவற்­றுக்கு தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தாக அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இலங்கை தீவு பல்­லி­னங்­களைக் கொண்­ட­தாகும். அவ்­வி­னங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி சமா­தா­ன­மான நிலை­மை­யொன்று ஏற்­ப­டு­வ­தையே நாம் விரும்­பு­கின்றோம். அவர்கள் பிரிந்து நிற்­பதை நாம் விரும்­ப­வில்லை. இந்த நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட முப்­பது ஆண்­டு­கால யுத்­தத்தில் வெற்­றி­யா­ளர்கள் யாரு­மில்லை. அனை­வ­ருமே இழப்­புக்­களைச் சந்­தித்­துள்­ளார்கள் என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்கா இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­புதல், அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தல் போன்ற அனைத்து விட­யங்­க­ளிலும் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­வ­தோடு ஆத­ர­வ­ளித்து துணை­நிற்கும். அமெ­ரிக்க ஜனா­தி­பதி பரக் ஒபாமா ஒவ்­வொரு தினமும் இலங்­கையில் என்ன நடக்­கின்­றது? பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் நிலைமை என்ன? நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் எவ்வாறுள்ளன? காணிகள் விடுவிக்கப்படுகின்றனவா? மக்கள் என்ன நிலையில் உள்ளார்கள்? போன்ற கேள்விகளை எழுப்புவார். அதேபோன்ற பல்வேறு மனிதர்களும் இலங்கை தீவின் மீது கவனத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் இவ்வாறான கேள்விகளையே கேட்கின்றார்கள். இவை அனைத்தும் எளிதில் நடைபெற்றுவிடாது. மெதுவாக நடைபெற்றாலும் அவை அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு இலங்கைத் தீவில் நிரந்த சமாதனம் ஏற்படுவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு குரல்கொடுப்பதுடன் இணைந்து செயற்படுவதற்கு கைகோர்க்க வேண்டுமென்றார்.